இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பதி மரணம்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த   குமாரசாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் கர்ப்பவதி ஒருவர் நேற்று (20) பிற்பகல் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில்  மெலும் தெரியவருவதாவது

குமாரசாமிபுரம்  கிராமத்தின் இடம்பெற்ற சமூர்த்திக் கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ள அவரை உடனே அவரை உறவினர்களும் அயலவர்களும் மீட்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வைத்தியசாலைக்கு சென்றடையும் முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.

மரணமடைந்தவர் கர்ப்பவதி என்பதால் சட்ட வைத்திய விசேட நிபுணர் பிரேத பரிசோதனை செய்வது அவசியம் என்பதனால் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடல் அநுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *