இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் போதிய விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்:-

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் போதிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் போதிய விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது எனவும் இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

தமிழ் மக்கள் பேரவை மக்களுடைய இயக்கமாகும் எனவும் அதனடிப்டையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகின்றது எனவும் தெரிவித்த அவர் மக்களை பேரவையில் இணைத்து ஒத்துழைக்கும் வகையில் சேவைகளை முன்னெடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில்; ஆரய்ந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம் எனவும் தெரிவித்தார். தங்களின் காணாமல் போன உறவுகளை இராணுவத்தினர் முன்னிலையில் உறவினர்கள் கையளித்திருந்த போதும் இராணுவம் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் இது தொடர்பில் போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்படி பேரவையின் பிரதித் தலைவர் ரி.வசந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *