இலங்கை

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு


முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பிலான தகவல்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போது எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி வரையில் அனுர சேனாநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நாளாந்த பதிவேட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் 25 பேரிடம் ஏற்கனவே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *