உலகம் பிரதான செய்திகள்

ரஸ்ய யுத்தக் கப்பல் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது


ரஸ்ய யுத்தக் கப்பல் ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி கரையோரப் பகுதியில் படகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. டொகோ கொடியைத் தாங்கிய கால்நடைகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றுடன் குறித்த ரஸ்ய யுத்தக் கப்பல் மோதுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான பனி மூட்டத்தினால் இவ்வாறு கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் கவலையடைவதாக துருக்கிய பிரதமர் Binali Yildirim ரஸ்ய பிரதமர்Dmitry Medvedev   ஐத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *