இலங்கை பிரதான செய்திகள்

சட்ட விரோத மண்அகல்வு குறித்து தகவல் வழங்கியவர் மர்மமானமுறையில் மரணம்:-

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றிச் செல்லும் லொறியொன்று குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கி நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் பாவட்டாமடுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினருக்கும் அரச நிறுவனங்களுக்கும் ரகசியமாக அறியத் வழங்குபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று அவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறையினர் புத்தளம் கருவலகஸ்வெள பகுதியி;ல் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முயன்ற லொறியொன்றை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *