இந்தியா பிரதான செய்திகள்

சமூக நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்:-

மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆதித்யநாத் நேற்று முன்தினம் ஆய்வு செய்ததன் பின்னர் அதிகாரிகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இதன்மூலம், தங்கள் நலனுக்காக அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஏனைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமெனவும் இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *