இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் காவல்துறை சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்


தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் காவல்துறை சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1500 வெற்றிடங்களுக்காக இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை கான்ஸ்டபிள்கள், பெண் கான்ஸ்டபிள்கள், காவல்துறை சாரதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு சேவையில் உள்ளீர்க்கப்பட உள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கு காவல் நிலையங்களுக்கு அதிகளவில் இந்த உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ் பேசும் விண்ணப்பதாரிகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *