இலங்கை பிரதான செய்திகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேதினக் கொண்டாட்டம் கிளிநொச்சியிலும், அம்பாறையிலும்

மே 01 ஆம் திகதி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறையிலும்  இந்தமுறை மே தினக் கூட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெறும் மே தினக் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் தற்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் எனவும்  அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு விரைவில் காண வேண்டும் உள்ளிட்ட  விடயங்களை வலியுறுத்தி மே தினக் கூட்டம் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *