இலங்கை பிரதான செய்திகள்

அரங்க ஆளுமை ”பிரான்சிஸ் ஜெனம் ” காலமானார் :-

ஈழத்து நாடக வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்ட அ .பிரான்சிஸ் ஜெனம் [ வயது 75] நேற்று கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் சில்லாலையைப் ,பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் , கொண்ட இவர் தனது இறுதிக்கு காலங்களில் கொழும்பில் வசித்து வந்தார். நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கத்தில் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக குழந்தை ம .சண்முகலிங்கத்துடன் செயற்பட்ட இவர் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து செயற்பட்டதுடன் நாடக நடிகனாகவும் , ,நெறியாளராகவும் அரங்கப் பயிற்சியாளனாகவும் இயங்கினார் .

”நாராய் நாராய் ” என்ற வெளிநாடுகளுக்கான அரங்கப் பயணத்தின் போது பலராலும் பாராட்டும் பெற்றவர் .பொறுத்தது போதும் நாடகத்தில் 1976 இல் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றதுடன் செங்கை ஆழியானின் ” வாடைக்காற்று ” மற்றும் இலங்கைத் திரைப் படங்களிலும் பெற்றவர் / அக்காலத்தில் இசை நாடகங்களில் பெண் பாத்திரங்களுக்கு ஆண்களே பாத்திரம் ஏற்ற போது கலையரசு சொர்ணலிங்கத்தின் தேரோட்டி மகனில் குந்தியாக நடித்து பலரையும் ஆச்சரிய படுத்தியவர் .

ஈழ அரங்க வரலாற்றில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நாடக ஆளுமைக்கு அரங்கச் செயற்பாட்டுக் குழு மற்றும் பண்பாட்டு மலர்ச்சி கூடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது .

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *