இலங்கை

ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது


ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் ஊடாக எவ்வாறான தீர்மானம் வழங்குவது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசியல் சாசனம் குறித்து கூட்டு எதிர்க்கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *