இலங்கை பிரதான செய்திகள்

தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் – விக்னேஸ்வரன்:-


“தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் கிடைக்க வேண்டியவற்றை நாம் பெற முடியும் எனவும், தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்” எனவும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதுடன் ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

காந்திஜி தனது அஹிம்சைப் போராட்டத்தை நடத்த இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிப்பாக அமைந்தன எனவும் அதே போன்று 1893 இல் முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *