இலங்கை பிரதான செய்திகள்

ஊடக சுதந்திரத்திரத்தில் இலங்கையில் சிறு முன்னேற்றம் – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல்


உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திரம் குறித்த   180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு  ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது.

மேலும் ஊழலுக்கெதிராக குரல் எழுப்பும்  ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *