இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனியார் நிறுவனங்களில் சேவை வழங்குகின்றனர்


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனியார் நிறுவனங்களில் சேவை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். எனினும் அரசாங்க வைத்தியசாலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் குறித்த மருத்துவர்கள், தனியார் நிறுவனங்களில் தங்களது சேவையை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் நவலோக வைத்தியசாலையில் இவ்வாறு சேவை வழங்க இணங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வைத்தியர்கள், தனியார் வைத்தியசாலைகளில் சேவையாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *