இலங்கை பிரதான செய்திகள்

மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு – தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்:-

முன்னாள் உயர் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஸ, கமால் குணரட்னவை பிரேஸிலுக்கான பிரதித் தூதுவராக நியமித்திருந்தார் எனவும் குறித்த காலப்பகுதியில் தூதரகத்தில் பணியாற்றிய நிமால் ரூபசிங்க என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு தூதரக உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு உதவியவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் பிரேஸிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள  வெளிவிவகார அமைச்சர்  என்ன காரணத்தினால் குணரட்ன குறித்த நபரை கொலை செய்தார் என்பதனை குறிப்பிடவில்லை.

எனினும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன குறித்த பணியாளரை மிகவும் மோசமாக நடத்தியிருந்தார் எனவும்  கமால் குணரட்ன மற்றும் அவரது மனைவியின் ஆடைகளை கழுவுமாறு கொலையுண்ட பணியாளர் பணிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ராஜதந்திர சேவையை சொர்க்கபூமியாக மாற்றியிருந்தது என மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *