விளையாட்டு

மரதன் ஓட்டப் போட்டியில் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றி


மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை நேரப் பெறுதியுடன் எலியுட் கிப்போக்  ( Eliud Kipchoge ) அபார வெற்றியீட்டியுள்ளார். இரண்டு மணித்தியாலங்களுக்குள் 26.2 மைல்களை கடந்து பயண தூரத்தை கடந்து  எலியுட் கிப்போக்   திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதன்மூலம் உலகில் மிகவும் கடினமான உலக சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் மரதன் ஓட்டப் போட்டியின் நேரப் பெறுதி சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சாதனை நேரப் பெறுதியை பதிவு செய்துள்ள எலியுட் கிப்போக் இரண்டு மணித்தியாலங்கள் இருபத்து ஐந்து செக்கன்களில் ஓட்ட தூதுரத்தை முடித்து சாதனை படைத்துள்ளார்.

எவ்வாறெனினும எலியுட் கிப்போக்கின் நேரப் பெறுதி உலக சாதனையாகக் கருதப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில காரணிகளின் அடிப்படையில் இந்த நேரப் பெறுதியை உத்தியோகபூர்வமான உலக சாதனையாக கருதப்பட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *