இலங்கை பிரதான செய்திகள்

பிரான்ஸூடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு


பிரான்ஸூடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவித்துள்ளது. பிரான்ஸில் புதிய ஜனாதிபதியாக  இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron   )  தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வெற்றியீட்டிய இமானுவேல் மக்ரோனுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது சந்தர்ப்பமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரான்ஸில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *