இலங்கை

இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.


40 நாடுகள் பங்குபற்றிய உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை ஈட்டித்தந்த மாணவர் ரகிந்து ரன்திவி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.  40 நாடுகள் பங்குபற்றிய உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் முதற்தடவையாக இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை ஈட்டித்தந்த கொழும்பு நாலந்தா கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ரகிந்து ரன்திவி விக்ரமரத்ன  இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஏப்ரல் 16 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற முக்கிய நாடுகளிலிருந்து 300 பேர் பங்குபற்றியிருந்தார்கள்.

மாணவர் ரவிந்து ரன்திவி சுற்றாடல் விஞ்ஞான பிரிவில் தயாரித்த சுற்றாடல் நிலமைகளால் மரங்களிலுள்ள மகரந்தங்களில் படியும் மாசடைந்த வளியினால் ஆஸ்த்மா நோய் மேலும் தீவிரமடைவது தொடர்பில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மாணவரின் திறமையைப் பாராட்டி பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி, அவரது எதிர்காலத்துக்காக தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *