உலகம் பிரதான செய்திகள்

தன்மீது யுத்தக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என அமெரிக்கா அச்சம் – ரொய்ட்டர்ஸ்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

ஏமனில் சவுதிஅரேபிய கூட்டணியினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு ஆதரவளிப்பதன் காரணமாக தன்மீது யுத்தக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என அமெரிக்கா அச்சமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபலசட்டத்தரணிகள் இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தனக்கு கிடைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

image
சவுதி கூட்டணியின் தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து  ஓபாமா நிர்வாகம் கவலையடைந்துள்ளதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளன,இதன் காரணமாக அமெரிக்க படையினர் சட்டசிக்கலில் சிக்கிக்கொள்ளலாம் என வாசிங்டன் கவலையடைவதை காண்பிக்கும் ஆவணங்களும் கிடைத்துள்ளன எனவும் ரொய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *