இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை சிறைகளில் ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்

தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. All Survivors Project  என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளாகள் போன்ற பல்வேறு தரப்பினர் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஓரினச் சேர்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டை தெரிந்துகொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண்கள் மீது ஆண்கள் மேற்கொள்ளும் பாலியல் தொல்லைகள் துன்புறுத்தல்கள் வெளிச்சத்திற் கொண்டு வரப்படுவதில்லை எனவும் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க இலங்கையில் போதியளவு சட்ட ஏற்பாடுகளும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *