இலங்கை

ரதன தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்


பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரதன தேரர் பயணம் செய்த மோட்டார் வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளம் அனுரதபுரம் வீதியின் கரவலகஸ்வௌ பகுதியில் இடம்பெற்ற இந்த  சம்பவத்தில் 52 வயதான சேனாதிபதி முதியன்சேலாகே பத்மினி என்ற சமுர்த்தி உத்தியோகத்தரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் உத்தியோகத்தர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரதன தேரர் பயணித்த மோட்டார் வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது ரதன தேரர் வாகனத்தில் இருந்தார் எனவும், சம்பவத்தின் பின்னர் வேறும் வாகனத்தில் அவர் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts