இலங்கை

இரண்டு வாரங்களுக்குள் மழை பெய்யாவிட்டால் மின்சாரம் தடைப்படும்

electicity
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மழை பெய்யாவிட்டால் நாட்டில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளுக்கு போதியளவு மழை பெய்யாத காரணத்தினால், நீர் நிலைகளில் நீர் வற்றிப் போய் தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை நீடித்து வருகின்ற காரணத்தினால் மின் விநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடுவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல் மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகம் செய்ய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *