இலங்கை

ஞானசார தேரரை கொலை செய்ய சதித் திட்டம் – திலன்த விதானகே


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்த விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

எழுத்து மூலம் இந்தக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அவர்  ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தி அதனையே காரணமாகக் காட்டி, அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கடும்போக்காளர்கள் இவ்வாறான ஞானசார தேரரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *