இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழுவின் சிரேஸ்ட்ட தளபதி சுட்டுக் கொலை:-


இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில் நடைபெற்ற மோதலின் போது புர்ஹான் வானியின் நெருங்கிய நண்பரும், தீவிரவாத குழுவின் மூத்த தளபதியுமான சப்ஸார் பட் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் காவல் வளையத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக பொலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

”முதற்கட்ட சண்டையில் சப்ஸார் உட்பட குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என காவற்துறையினர் அறிவித்துள்ளனர். சப்ஸார், ஃபெய்ஸான் மற்றும் அடில் ஆகியோரே கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சப்ஸார் கொல்லப்பட்ட செய்தி காஷ்மீர் முழுக்க வேகமாக பரவியுள்ள நிலையில் அங்கு தற்போது பதற்றம் அதிகரித்து வருவதாகவும், சப்ஸாரின் கொலை செய்தி இமயமலை பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களளில் தன்னிச்சையான பணிநிறுத்தத்தை தூண்டிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் பரவும் பட்சத்தில் இணையதளம் மற்றும் தொலைப்பேசிச் சேவைகள் முடக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சப்ஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு அருகே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஏற்கனவே கூடியுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழுவின் மூத்த தளபதி சுட்டுக் கொலைபடத்தின் கடந்தாண்டு ஜூலை 8 ஆம் தேதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து பரவலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதே போராட்ட நிலை தற்போது மீண்டும் நடைபெற்றுவிட கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் போராடி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *