இலங்கை பிரதான செய்திகள்

அறிவித்தல்கள் 2:-

இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலய பாடசாலைகள் இயங்காது:-

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே பாடசாலைகள் நாளை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு!

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு அறிவுரை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் இலத்திரனியல் பதாகைகளில் காணப்படும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பாதையில் பயணிப்பவர்கள் அவசர நிலைமையின் போது 1969 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளிக்க முடியுமென, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *