உலகம் பிரதான செய்திகள்

ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது:-

கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் வடகொரியா சுமார் 9 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை, பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையை அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ​

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *