இலங்கை

முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை -பிரித்தானிய FDI சஞ்சிகை

27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு இலங்கை என்று சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு – 2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (30) கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

அதன்போது இதற்குரிய சான்றிதழ் பிரித்தானியாவின் FDI சஞ்சிகையின் துணை ஆசிரியர் Jacopo Dettoni யால் ஜனாதிபதி யிடம் ஒப்படைக்கப்பட்டது.  அந்த சான்றிதழ் ஜனாதிபதியினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *