இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.நூலக எரிப்பு 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்:-

 

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் முன்பாக நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது அதன் போது நூலக முன்றலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்ட செய்தியினை கேள்வியுற்று மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் பற்றாளர் வண.பிதா . தாவீது அடிகள் மற்றும் நூலக நிறுவுனர் செல்லப்பா ஆகியோரின் உருவப்படங்களுக்கும் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்க்கட்சி உறுப்பினரான சி.தவராசா , ஆளும் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் , அனந்தி சசிதரன் , பா.கஜதீபன் , விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் நிகழ்வு.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை பொது நூலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *