விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி


சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 87 ஒட்டங்களினால் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் இங்கிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ஜோ ரூட் 64 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குரே அன்டர்சன் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதில், கேன் வில்லியம்ஸன் 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் லியாம் பென்கலட் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *