இலங்கை பிரதான செய்திகள்

ஐ.நா மனித உரிமைப் பேரவை அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை – அரசாங்கம்

laksman-kiriyalla
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை மீது தற்போது எவ்வித அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பல பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ள அவர் எனினும் தற்பொழுது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரங்கள் பற்றி பேசப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *