இலங்கை பிரதான செய்திகள்

சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்க வேண்டும் – தயா ரட்நாயக்க

சகிப்புத் தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கதெரிவித்துள்ளார். ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய தம்மீதும் தமது படையினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமதிப்பதாகவும் கூறிய ரத்னாயக்கா  தமது பொறுமையை சோதிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாக  இராணுவத்தின் வசமிருந்த காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை இயந்திர சாதனங்கள் பழைய இரும்பாக விற்கப்பட்டமை விடயம் தொடர்பிலேயே முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் விசாரணை நடாத்தப்பட்டது.

இந்த விடயத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு தொடர்பில்லை என்று கூறியதயா ரட்நாயக்க , இன்று நாடு அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க இராணுவத்தின் தியாகமே காரணம் என்றும் தம்மை சீண்டிப் பார்க்கும் வகையில் அரசாங்கம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக எடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதனால் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *