இலங்கை பிரதான செய்திகள்

புதிய கட்சிக்கான யாப்பினை அமைக்கும் பணிகளில் கூட்டு எதிர்க்கட்சியினர் தீவிரம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய கட்சிக்கான யாப்பினை அமைக்கும் பணிகளில் கூட்டு எதிர்க்கட்சியினர் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏழு பேரைக்கொண்ட குழு ஒன்றின் மூலம் புதிய கட்சிக்கான யாப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

constitution
ஜனாதிபதி சட்டத்தரணி, சிரேஸ்ட சட்டத்தரணிகள் இருவர், இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தொழில்சார் நிபுணர் ஒருவர் ஆகியோர் இவ்வாறு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாப்பு அமைக்கும் பணிகள் ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, புதிய அரசியல் கட்சிக்கான பெயரை குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு 13,000 மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *