இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையின் பிரதான சந்தேக நபரான சுன்னாக பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் அதிகாரி சிந்திக்க பண்டார உட்பட மூன்று  பொலிசாரை எதிர்வரும் 24ம திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவு இட்டு உள்ளார்.குறித்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று  பொலிசார் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பொலிஸ் சந்தேக நபர்களை கடந்த யூலை மாதம் 25ம திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கைது செய்யுமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவு இட்டு இருந்த நிலையில் மூன்று மாதம் கடந்த நிலையில் நேற்று வியாழக்கிழமையே மூன்று பொலிசார் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பட்டத்தை அடுத்தே நீதிவான் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவர், கடந்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜராகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ஏனைய 4 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 பேர் வியாழக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்து இருந்தனர். அது  தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.arrest

அந்நிலையில், கடந்த மாதம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.

தம் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தி சுன்னாக பொலிஸார் கைது செய்தனர் எனவும், கைது செய்த பின்னர் தம்மை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும்,  அதில்  தம்முடன் கைதான சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் தமது நண்பன் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாகவும், பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்தச் சம்பவம் 2011 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றதாகவும் கூறினர்.

மேலும், உயிரிழந்த தமது நண்பனின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி விட்டு தமது நண்பன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்ததாக நீதவானிடம் தெரிவித்தனர். அப்போது சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவர் தலைமையிலான மூன்று தமிழ் பொலிஸார் உட்பட எட்டு பேர் இதனுடன் தொடர்புபட்டவர்கள் என என பொலிஸாரின் பெயர் குறிப்பிட்டு மன்றில் வாக்குமூலம் அளித்தனர்.

அதனை அடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இளைஞர்கள் பெயர் குறிப்பிட்ட பொலிஸார் அனைவரையும் கைது செய்யுமாறும், மூன்று மாத கால பகுதிக்குள் பூரண விசாரணைகளை முன்னெடுத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், 5 பொலிஸ் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, குற்றப்புலனாய்வுப் பொலிஸார், (சடலம் கண்டெடுக்கப்பட்டமை கிளிநொச்சி என்ற அடிப்படையில்) கிளிநொச்சி நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ய கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற  நீதவான் உத்தரவிட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *