இலங்கை

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களில் முப்படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள்


தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களில் முப்படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரையில் அவ்வாறு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் இனவாத அடிப்படையில் செய்தித் தலைப்புக்களை இட்டு வருவதாகவும் செய்திகளுக்கு அது பொருத்தமாக இருந்தாலும், நாட்டுக்கு அது நன்மையை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில கடும்போக்குவாதிகள் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் சின்னச் சின்னப் பிரச்சினைகளை பூதாகாரமாக்க முயற்சிப்பதாகவும் கருணாசேன ஹெட்டியாரச்சி  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *