இலங்கை பிரதான செய்திகள்

கல்வி அமைச்சர் நியமிக்கப்படவில்லை – வடமாகாண முதலமைச்சர்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது இது உண்மையா என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் எந்தவித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக தன்னால் முடிவெடுக்கப்படவில்லை எனவும்  நியமனங்களைச் செய்ய வேண்டியவர் முதலமைச்சரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures)   உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் தன்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தானே மேற்பார்வை செய்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *