இலங்கை பிரதான செய்திகள்

நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் கிடையாது – காவல்துறை

prasantha-jeyakodi
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் கிடையாது எனவும் இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக சில தரப்பினர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவின் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சில இணைய தளங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்ய மேல் மாகாணத்தில் கடந்த வாரம் அவசர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கிலேயே இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும், ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்யும் நோக்கில் தேடுதல் வேட்டை நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *