இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பின் முச்சக்கர வண்டி சாரதிகள் பெண் பயணிகளை தேவையற்ற முறையில் தொடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தூதரகத்தின் இணைய தளத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் தனியாக பயணங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் நிறுவன டாக்ஸிகளை பயன்படுத்துமாறும், தனிப்பட்ட நபர்களின் முச்சக்கர வண்டிகளில் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

முச்சக்கர வண்டிக்குள் ஏறுவதற்கு முன்னதாக சாரதி மற்றும் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகடு என்பனவற்றை புகைப்படம் எடுக்குமாறும் கோரியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *