இலங்கை பிரதான செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

14632827_1378467532181279_1811424914854104900_n
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின்  16 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக  எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10.30 அளவில் யாழ்.ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
14720597_1378467652181267_7710364318089077614_n

படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து குறித்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *