இலங்கை பிரதான செய்திகள்

பதவியை துறக்கத் தயார் – திகாம்பரம்

palani-thigamparam
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பதவியை துறக்கத் தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு தமது பதவி ஓர் தடையாக இருந்தால் அதனை துறக்கவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *