இலங்கை பிரதான செய்திகள்

பாதுகாப்பு சார் விடயங்கள் குறித்து யாழ் படையினர் – ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பாதுகாப்பு சார் விடயங்rita-isaqகள் குறித்து யாழ்ப்பாண படையினர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிறுபான்மை விவகாரங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ரீடா இசாக்கிற்கு விளக்கம் அளித்துள்ளனர். ரீடா இசாக்கும் மேலும் இரண்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். பலாலி இராணுவ முகாமில் வைத்து ரீடா இசாக் உள்ளிட்ட பிரதிநிதிகள், யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

யாழப்பாண குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து யாழ்கட்டளைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கு யாழ் கட்டளைத் தளபதி நினைவுச் சின்னங்களை வழங்கியிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *