இலங்கை பிரதான செய்திகள்

நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு வரவேண்டிய நிதியினை பேரிணையம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை (10.07.2017) காலை 07.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *