இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் வயோதிபர்களை குறிவைக்கும் திருட்டுக் குழுக்கள்:- இன்றும் பல இலட்சங்கள் கொள்ளை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-

robbery

முழங்காவில்,  பல்லவராயன் கட்டு சோலை பகுதியில் உள்ள வீட்டுக்குள்    ஞாயிற்றுக்கிழமை  (16) அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகியோரை மிரட்டி உட்கார வைத்து, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

நான்கு  லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும்  முப்பத்தாறு  பவுண் தங்க நகை என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்த திருடர்கள்  தொலைபேசியை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர், வீட்டிலிருந்த வயோதிப கணவன்,மனைவியை கொட்டன்களால்  அடித்து  மிரட்டி உட்கார வைத்து, கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பில் முழங்காவில்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  முழங்காவில் பொலிசார் மற்றும் கிளிநொச்சி  தடகவியல் பொலிசாரும் இணைந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அத்துடன்   சனிக்கிழமை நள்ளிரவு பதினோரு மணியளவில் ஜெயபுரம் தெற்குப்பகுதியில்  உள்ள  வீடொன்றில்   நுழைந்த  திருடர்கள் இதேபோல்  வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் கணவனுடைய  அம்மா  ஆகியோரை கொட்டன்களால்  அடித்து  மிரட்டி உட்கார வைத்து, இரண்டரைப்பவுன் நகைகளை  கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பாக நாச்சிக்குடா  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  நாச்சிக்குடா பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நடைபெற்ற திருட்டுக்களும் ஒரே வகையாக இருப்பதனால் இரண்டுக்கும் தொடர்பிருக்குமா அல்லது  வெவ்வேறு  திருட்டுக்கும்பல்களாக  இருக்குமா  என்ற  சந்தேகத்தில்  கிளிநொச்சி ,முழங்காவில் , நாச்சிக்குடா பொலிசார்  ஒன்றாக இணைந்து பல கோணங்களில்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அதுமட்டுமல்லாமல்  கடந்த செவ்வாய்க்கிழமையும்  இதேபாணியில் கிளிநொச்சி முரசுமோட்டை  பழையகமம்  பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால்  அடிப்போம்  எனப்பயமுறுத்தி  வீட்டிலிருந்த  இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள்  என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் ஒன்றும்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *