உலகம் பிரதான செய்திகள்

சீனாவிடம் மண்டியிடப் போவதில்லை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

rodrigo-duterte
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பிலிப்பைன்ஸின் இறைமையை எந்த காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்கவோ அல்லது யாரிடமும் மண்டியிடப்போவதில்லை என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte தெரிவித்துள்ளார். கடல் எல்லை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை தொடர்பில் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிலிப்பைன்ஸிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சீனத் தலைமைகள் அந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை. கடற்பரப்பை தந்துவிடுமாறு கெஞ்சப் போவதில்லை எனவும் அந்தக் கடல் பகுதி தமதே எனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *