இலங்கை பிரதான செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டில் இடம்பெற்ற இந்த கலகத்தில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர். சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போது இந்த கலகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும் அது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊடகவியலாளர் கசுன் புஸ்வெல்லவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது. இதன் போது சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாக கசுன் தெரிவித்திருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *