இலங்கை

மஹிந்தவை விடவும் இந்த அரசாங்கம் களவாடுகின்றது – பெவிதி ஹன்ட


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும் இந்த அரசாங்கம் களவாடுகின்றது என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பத்து ஆண்டுகளில் திருடியதை இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் திருடியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த திருடினாலும் நாட்டுக்கு சேவையாற்றினார் எனவும் தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு சேவையாற்றுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு இன்று அதள பாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும், மாற்றம் சுகமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் ஒன்றை விடவும் மக்கள் வாழ்வதற்கான வழிகளே அவசியப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *