இலங்கை பிரதான செய்திகள்

வர்த்தகர் நடேசனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

bail
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வர்த்தகரும், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர் திருக்குமார் நடேசனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா  பத்து லட்சம் ரூபா சரீரப் பிணை அடிப்படையில் நடேசனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு விசாரணைக்காக சென்றிருந்த போது நடேசன் கைது செய்யப்பட்டு பூகொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நடேசனை பிணை விடுவிப்பதாக நீதவான் டி.ஏ. ருவான் பத்திரண அறிவித்துள்ளார். மல்வான பிரதேசத்தில் 16 ஏக்கர் காணி ஒன்றை கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி ஆறு கோடி நாற்பது லட்சத்திற்கு நடேசன் கொள்வனவு செய்துள்ளதாகவும், இதற்கான வருமான வழிகள் காண்பிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *