உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளின் இரகசிய சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்தது:-

 ஜெர்மனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் ரகசியமாக சந்தித்துப் பேசியதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற போது அதில் பங்கேற்க சென்ற ட்ரம்பும் புதினும் கடந்த 7ம்திகதி சுமார் 2 மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் அன்று இரவு விருந்தின்போதும் இருவரும் இரண்டாவது முறையாகவும் சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசியதாக செய்தி வெளியிட்டிருந்த வோஷிங்டன் போஸ்ட் அதன்போது புதினின் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அங்கு இருந்துள்ளார் எனவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்பும் புதினும் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசவில்லை எனவும் இரவு விருந்து முடியும் போது இருவரும் சுருக்கமாக பேசினர் எனவும் தெரிவித்துள்ளதுடன் இந்தச் சந்திப்பை மறைத்துவிட்டதாகக் கூறுவது தவறு என தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக ட்ரம்ப் பிரச்சாரக் குழுவும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த இரு தலைவர்களின் ரகசிய சந்திப்பு அதை உறுதிப் படுத்துவதாக உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *