இந்தியா பிரதான செய்திகள்

இந்திய ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் மாற்றம்:-

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் எதிர்வரும் வரும் 25ம் திகதி பதவியேற்க உள்ளநிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பொது நிறுவனங்கள் வாரியத் தலைவராக இருந்த சஞ்சை கோத்தாரி ஜனாதிபதியின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநில பிரிவு ஐ.எப்.எஸ் அதிகாரியான பாரத் லால் ஜனாதிபதியின் இணைச் செயலாளராகவும், சிரேஸ்ட பத்திரிக்கையாளர் அசோக் மாலிக் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட அதிகாரிகள் இரண்டாண்டுகள் பதவிக்காலம் வகிப்பார்கள் என்றும் அதிகாரிகள் நியமன குழு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *