இலங்கை பிரதான செய்திகள்

மகிந்தவின் உறவினர் உதயங்கவிற்கு இன்னமும் இன்டர்போல் பிடிவிராந்து பிறப்பிக்கவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மகிந்த ராஜபக்ஸவின் உறவினருமான  உதயங்க வீரதுங்கவிற்கு இன்னமும் இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இலங்கைக் காவல்துறையினர் சர்வதேச காவல்துறையினரிடம் உதயங்கவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ள போதிலும் எனினும், இதுவரையில் அவ்வாறான பிடிவிராந்து உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே உதயங்க வீரதுங்க சுதந்திரமாக நாடுகளுக்கு பயணம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உதயங்கவை வெளிநாட்டில் வைத்து கைது செய்வது குறித்த சிகப்பு எச்சரிக்கை இன்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *