இலங்கை பிரதான செய்திகள்

உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:-


நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கண்ணீர் விட்டழுதார்.

நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் ஹேமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் பொறுப்பெற்பதற்காக உயிரிழந்தவரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை யாழ். சென்று இருந்தனர்.

சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை பிணவறைக்கு சென்றிருந்த வேளை அங்கு நின்றிருந்த நீதிபதி உறவினர்களை கண்டதும் கதறி அழுதார். அத்துடன் அவர்களின் காலிலும் வீழ்ந்து அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கி இருந்தது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *