இலங்கை பிரதான செய்திகள்

நல்லூரில் நடைபெற்றதாக்குதல் – “உரியநடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்”- முதலமைச்சர்:-

கடந்தசனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போதுஉயிர் நீத்தபொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவுஎம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்தபொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அருமந்த ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்துவருவதாக வடமாகாண உப பொலிஸ்மாஅதிபர் தெரிவித்துள்ளார். இந்ததாக்குதல் சம்பந்தமாக உரியநடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *